அமெரிக்க சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு தேசிய புலனாயவு இயக்குநர் துளசி கப்பார்ட்டை சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி அமெரிக்க சென்றார். வாஷிங்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினரும் பிரதமரை வரவேற்றனர்.
பின்னர் அமெரிக்க தேசிய புலனாயவு இயக்குநர் துளசி கப்பார்ட்டை சந்தித்து பேசினார். அப்போது நட்புறவு, பாதுகாப்பு உள்ளிட் பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.