ஓசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணி சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சிப்காட் அமைப்பதற்கு தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், சூளகிரி ரவுண்டானா முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை விவசாயிகள் பேரணியாக சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பேட்டியளித்த சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இனி புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்க கூடாது என வலியுறுத்தினார்.