சேலம் கோட்டத்தில் உள்ள 9 ரயில் நிலையங்களில் மார்ச் 1 முதல் கூடுதல் ரயில்கள் நின்று செல்லும் என ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகியவை பெரிய ரயில் நிலையங்களாக உள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 73 ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த இரண்டாம் நிலை ரயில்வே நிலையங்களின் பிளாட்பாரத்தில 15 முதல் 18 பெட்டிகள் மட்டும் நிற்கும் வகையில் உள்ளதால், அதனை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, சேலம் டவுன், வீரபாண்டி ரோடு, ஏத்தாப்பூர் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் 28 பெட்டிகள் நின்று செல்லும் வகையில் பிளாட்பாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக நடந்து வந்த பணிகள் நிறைவடைந்துள்ளதால், மார்ச் 1 முதல் 9 ரயில் நிலையங்களிலும் கூடுதலாக ரயில்கள் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.