கள்ளக்குறிச்சி அருகே நில மோசடி புகாரளித்த பெண் கூலி தொழிலாளியிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சின்ன பொண்ணு என்பவருக்கு முனியம்மாள் என்ற மகள் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு முனியாம்மாளுக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே, சின்னப்பொண்ணுவின் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் குடியிருக்கும் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் மருமகன் குமார் அபகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வடப் பொண்பரப்பி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகத்திடம் சின்னப்பொண்ணு புகார் அளித்துள்ளார்.
ஆனால், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் குமாரிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், சின்னப்பொண்ணுவின் வீட்டுக்குச் சென்று விசாரணை என்ற பெயரில் அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் அவர் திட்டியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகத்தை ஆயுதப்படை மாற்றி கள்ளக்குறிச்சி எஸ்பி ரஜித் சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.