தென்காசி மாவட்டம், குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் தை மாத மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், குற்றாலநாதர் கோயிலில் இருந்து சுவாமி, குழல்வாய்மொழி அம்பாள் மேள தாளங்கள் முழங்க சித்ர சபைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் சித்திர சபைக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில் மூங்கில் பிரம்பினால் வடிவமைக்கப்பட்ட கொடுங்கை விமானத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி நீராடி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வந்தனர்.
விழாவில் குற்றாலம், இலஞ்சி, காசிமேஜர்புரம் செங்கோட்டை மேலகரம் ,தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.