ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண் மீது ரசாயன பொடி தூவி ஆறு சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த உமாராணி என்பவர் சோழம்பேடு பகுதியில் சிறிய ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் உடை எடுப்பதுபோல் நடித்து அவர் மீது ரசாயன பொடி தூவியுள்ளனர்.
இதில் சுயநினைவை இழந்த உமாராணியிடம் தாலி செயின் உள்ளிட்ட 6 சவரன் நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.