அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஊத்து, காக்காச்சி, நாலு மூக்கு ஆகிய பகுதிகளில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவுபடி அங்குள்ள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கி வசித்து வரும் நிலையில், மீதமுள்ளவர்களுக்காக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கம்போல இரவு மாஞ்சோலைக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது.
மணிமுத்தாறு அணைப்பகுதி அருகே சென்றபோது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று பேருந்தை வழிமறித்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.