சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் விசிகவினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி, அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
கடந்த ஜனவரி 22ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்கவேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த கட்டப் பஞ்சாயத்தில் ஆசிரியர் கழக தலைவரும், திமுக பிரமுகருமான ஜோதிக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இதுவரை 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
மேலும், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் இந்த சம்பவத்தை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.