2024 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடும்போது உத்தரப்பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் தற்போது 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில், உத்தரப்பிரதேசத்தில் தற்போது மக்களவை தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய ஜனநாயக கூட்டணி 43 முதல் 45 இடங்களை கைப்பற்றும் என்றும், இண்டி கூட்டணிக்கு 34 முதல் 36 இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணியை தேசிய ஜனநாயக கூட்டணி கணிசமாக மிஞ்சும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாஜகவின் வாக்கு வங்கி 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இண்டி கூட்டணியின் வாக்கு வங்கி 2 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.