சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆய்வக பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் இரும்பாலை சாலையில் செயல்பட்டு வரும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் பயிலும் சில மாணவிகள் கல்லூரி முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர்.
அதில், கல்லூரியின் ஆய்வக பணியாளர் வேலு என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து, முதல்வர் தேவி மீனாள் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொண்ட தனிக்குழுவினர் வேலு மீதான குற்றத்தை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து, ஆய்வக பணியாளர் வேலுவை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் தேவி மீனாள் உத்தரவிட்டார். தொடர்ந்து, வேலுவிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.