கன்னியாகுமரியில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நித்திரவிளை கிராமத்தை சேர்ந்த 71 வயது மூதாட்டி ஒருவர் வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சேவியர் என்பவர், மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நாகர்கோவில் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.