கும்பகோணத்தில் உள்ள சுவாமி மலை முருகன் கோயில் மற்றும் கும்பேஸ்வரர் கோயிலில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாண் 4 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்துள்ளார். முருகனின் அறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்ய அவர் திட்டமிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக கும்பகோணத்தில் உள்ள சுவாமி மலை முருகன் கோயிலில் அவர் வழிபாடு நடத்தினார்.
முன்னதாக கும்பேஸ்வரர் கோயிலிலும் அவர் சுவாமி தரிசனம் செய்த நிலையில், கோயில் அரசியல் பேச மாட்டேன் என அவர் தெரிவித்தார்.