உதகை மலை சாலையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மைசூரில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை ஏறறிவந்த சரக்கு லாரி, உதகை நோக்கி பயணித்தது. தவளமலை அருகே சென்றபோது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேல்புற சாலையில் இருந்து கவிழ்ந்து கீழ்புற சாலையில் விழுந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், விபத்து காரணமாக 3 மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.