கங்கையில் புனித நீராடிவிட்டு சொந்த ஊர் திரும்பிய பக்தர்களின் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 34 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கை நிதியில் புனித நீராட சென்று விட்டு சிலர் சொந்த ஊருக்கு டிராக்டரில் திரும்பி கொண்டிருந்தனர்.
கஞ்ச் துந்த்வாரா பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 34 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.