நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செல்வக்குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அவரிடம் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஆங்கில வரிக்கு தமிழில் அர்த்தம் கேட்டுள்ளார். அதற்கு செல்வக்குமார் ஆபாசமான வார்த்தைகளால் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.