அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்து மனுவை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த தடையை நீக்கக்கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
மேலும், தேர்தல் ஆணையம், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள்,
தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக வேறு யாராவது வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும் என ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.