எதிர்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை மார்ச் 10ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
வக்ஃபு சட்டத்திருந்த மசோதா குறித்து ஆராய பாஜக எம்.பி ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டுக்குழு உறுப்பினர்களின் பரிந்துரை இறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த 655 பக்கங்கள் கொண்ட அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.