புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாமாரன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து மக்களவையில் பேசிய அவர், வருமான வரிச்சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகள் கடந்து விட்டதாகக் கூறினார். புதிய மசோதாவில் மொழியை எளிமைப்படுத்தியதன் காரணமாக வருமான வரி சட்டத்தை எளிமையாக புரிந்து கொள்ள முடியும் எனக்கூறிய நிர்மலா சீதாராமன், இது வரி செலுத்துவோருக்கு நம்பிக்கை அளிக்கும் என தெரிவித்தார்.
மேலும், நாட்டில் 5 புள்ளி 22 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 4 புள்ளி 31 சதவீதமாக குறைந்துள்ளது என்றும், தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் எனவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்றதால், திட்டமிட்டபடி மார்ச் 10ம் தேதி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.