திரிவேணி சங்கமத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு வரும் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனையொட்டி அம்மாநில அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 49 கோடியை தாண்டியுள்ளது.
இதனைதொடர்ந்து இன்றும் திரளான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டனர். மேலும், பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்ப்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மகா கும்பமேளாவில் இன்று 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.