மகா கும்பமேளா குறித்து நார்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் புகழ்ந்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வு மட்டுமல்ல, வரலாற்றில் மிகப்பெரியளவில் மக்கள் கூடும் நிகழ்வு என்றும், கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கும்பமேளாவில் கலந்து கொண்டது மறக்க முடியாத தருணம் என்றும், இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், இந்துக்களை மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களையும் ஈர்க்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.