இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு பிழம்புகளை வெளியேற்றி வருகிறது.
ஐரோப்பாவின் தென் இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள இந்த எட்னா எரிமலை, 2013-இல் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை 90-க்கும் மேற்பட்ட முறை வெடித்துள்ள இந்த எரிமலை, தற்போது மீண்டும் வெடித்துள்ளது. தொடர்ந்து வெளியேறும் நெருப்பு பிழம்புகள் காரணமாக விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
மேலும், சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சாம்பல் காற்றில் பறப்பதால் பெரும்பாலான மக்கள் மூச்சுத்திணறலால் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.