மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்தி ஆகிய 2 சமூகத்தினர் இடையிலான பிரச்னை மாநிலம் முழுவதும் வன்முறையாக வெடித்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்னை தொடர்கிறது.
இந்நிலையில், முதலமைச்சர் பொறுப்பிலிருந்து பிரேன் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். இதனால், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..