திருந்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் வழிபாடு நடத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் வந்துள்ளதாக தெரிவித்தார் . சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் தமிழக கோயில்களுக்கு வர வேண்டும் என நினைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
“நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியவுடன் வாழ்த்து தெரிவித்ததாகவும், நாட்டிற்கு நல்லது நடக்க யார் வந்தாலும் வரவேற்பேன் என்றும் பவன் கல்யாண் கூறினார்.