அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை எலான் மஸ்க் சந்தித்த நிலையில் அவரது மகன் சுட்டித்தனம் செய்வது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து தொழிலதிபர் எலான் மஸ்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எலான் மஸ்க்குடன் வருகைதந்த அவரது 4 வயது மகன், தந்தையின் தோள் மீது அமர்ந்து சேட்டை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.