பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரை 3 பெண்கள் காரில் பயணத்தை தொடங்கி உள்ளனர்.
இதன் தொடக்க விழா சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூயில் நடைபெற்றது. நல்லி குழுமத்தின் நிறுவனர் நல்லி குப்புசாமி, சென்னை ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா ஆகியோர் பசுமைப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பசுமைப் பயணத்திற்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி மீடியா பார்ட்னராக உள்ளது.
தொடக்க விழா நிகழ்வின்போது தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியிளித்த தொழிலதிபர் நல்லி குப்புசாமி, பெண்கள் துணிச்சலாக இத்தகைய பயணம் மேற்கொள்வது பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா, 3 பெண்களும் நேபாளம் வரை பசுமைப் பயணம் மேற்கொள்வது சாதாரண விஷயம் அல்ல என தெரிவித்தார்.
மொத்தம் 6 ஆயிரத்து 360 கிலோமீட்டர் தொலைவிலான இந்த பசுமைப்பயணத்தில், தங்களுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பெண்கள், பொதுநலனுக்காக இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறினர்.