கேரள மாநிலம் மூணாறில் சுற்றித் திரியும் படையப்பா யானைக்கு மதம் பிடித்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மூணாறில் தேயிலை தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் படையப்பா யானை அடிக்கடி உலா வருகிறது. இந்த நிலையில், அந்த யானை கடந்த சில நாட்களாக மிகுந்த அக்ரோஷத்துடன் காணப்பட்டுகிறது.
இதையடுத்து அந்த யானையை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்த வனத்துறையினர், அதனை கால்நடை மருத்துவர்களிடம் சோதனைக்கு உட்படுத்தினர்.
இந்த நிலையில், படையப்பா யானைக்கு மதம் பிடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களில் மறையூர்-மூணார் சாலையில் இரண்டு வாகனங்களை படையப்பா யானை தாக்கியுள்ளதாக தெரிகிறது. நேற்று இரவு 10 மணியளவில் KSRTC பேருந்தை படையப்பா யானை தாக்கியதில், அந்தப் பேருந்து சேதமடைந்தது.