உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஏரி 138 புள்ளி 3 மீட்டர் நீளமும், 42 மீட்டர் அகலமும் கொண்டது, மேலும் 345 மீட்டர் சுற்றளவு கொண்டது. இது 8 ஆயிரத்து 335 கன மீட்டர் வெப்ப கனிம நீரைக் கொண்டுள்ளது, இது ஒரு அசாதாரண இயற்கை அதிசயமாக அமைகிறது.
இந்த ஏரியை முதன் முதலில் 2021-ம் ஆண்டு செக் குடியரசின் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் அதன் முழு அளவை மதிப்பிடுவதற்கான உபகரணங்கள் இல்லாத நிலையில், தற்போது 3D ஸ்கேனர்களுடன் விஞ்ஞானிகள் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.