அர்ஜென்டினாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
என்ட்ரே ரியோஸின், எஸ்தான்சியா கிராண்டே பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடும் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் தீயால் கடும் புகையாக காட்சியளிப்பதால் பெரும்பாலான மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.