அயோத்தி ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸின் உடல் சரயு நதியில் ‘ஜலசமாதி’ செய்யப்பட்டது.
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
இந்நிலையில் அவரது உடல் நகரம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சரயு நதியில் அவரது உடலில் கனமான கற்கள் கட்டப்பட்டு ஆற்றில் ‘ஜலசமாதி’ செய்யப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் இயக்கத்தில் அவர் ஒரு மைய நபராக இருந்தார், மேலும் அவர் இறக்கும் வரை சமூகத்தில் செல்வாக்குடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.