திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பியவர்களை கஸ்டடியில் எடுத்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பதி லட்டு தயாரிப்பிற்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக அறிக்கை மூலம் உறுதியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஏ.ஆர். டெய்ரி நிறுவன உரிமையாளர் ராஜசேகரன் உட்பட 4 பேர் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நால்வரிடமும் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக கூறி எஸ்ஐடி குழுவினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்று முதல் 4 நாட்களுக்கு விசாரணை செய்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து 4 பேருக்கும் திருப்பதி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.