ஈஷா யோகா மைய விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
ஈஷா யோகா மையத்தில் விதி மீறி கட்டடங்கள் கட்டப்பட்டதாக விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூரிய காந்த், விளக்கம் கேட்கும் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை உரிய நேரத்தில் அணுகுவதிலிருந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை எது தடுத்தது என கேள்வி எழுப்பினார்.
ஏன் தமிழகம் இந்த விவகாரத்தில் திடீரென தங்கள் முன் வந்துள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுபோன்று முன்னுரிமை அளித்து விசாரணை நடத்தினால் சாதாரண மனிதர்கள் எங்கே போவார்கள் எனவும் கோபமாக தெரிவித்தார்.