கோவை குண்டு வெடிப்பின் 27ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்ட பாஜக சார்பில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோவை குண்டு வெடிப்பின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டு வெடிப்பில் உயிரிழந்த 7 பேருக்கு பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ள அவர்களின் உருவப் படத்திற்கு பாஜக நிர்வாகிகள், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.