சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வந்த லக்ஷமி நாராயணன், வடமலை ஆகியோர் நிரந்திர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் , நிரந்திர நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் லக்ஷமி நாராயணன், வடமலை ஆகியோரை நிரந்திர நீதிபதிகளாக நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு கொலிஜீயம் பரிந்தரைத்தது.
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு வழங்கிய அனுமதியின் பேரில் லக்ஷமி நாராயணன், வடமலை ஆகியோர் நிரந்திர நீதிபதிளாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நிரந்திர நீதிபதிகளின் எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது.