பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த R.N.சிங், பாம்பனில் கட்டி முடிக்கப்பட்ட புதிய செங்குத்து பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அந்த பாலத்தின் வழியாக இயக்கப்பட்ட ரயிலை பச்சை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர், ரயில் மார்க்கமாக ராமேஸ்வரம் ரயில் நிலையம் வந்த ஆர்.என்.சிங், ராமேஸ்வரத்தில் நிறைவு பெற்றிருக்கும் ரயில் நிலைய பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாதத்தில் பாம்பன் ரயில் பாலம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.