விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அழகு முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சன்னதி வீதியில் அமைந்துள்ள அழகு முத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.
இந்நிலையில், காலை முதல் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மங்கல இசை வாத்தியங்களுடன் வேத விற்பனர்களின் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.