நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், குட்டியுடன் காட்டு யானைகள் மாயாற்றை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன.
முதுமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் வெயில் காரணமாக, வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு மற்றும் நீர்நிலைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில், தெப்பக்காடு பகுதியில் அமைந்துள்ள மாயாற்றை நோக்கி குட்டியுடன் சாலையை கடந்து சென்ற காட்டு யானைகளை, அவ்வழியாக சென்ற பயணிகள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.