உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் உள்ள செர்னோபில் அணு உலையில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு, அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் செர்னோபில் அணு உலையில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் சுவர் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அணு உலையின் தீவிரத்தை உணராமல் அதன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1986ஆம் ஆண்டு செர்னோபில் அணு உலையில் விபத்து நிகழ்ந்ததால், கதிர்வீச்சை தடுக்கும் வகையில் இந்த பிரமாண்ட சுவர் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.