திண்டுக்கல் சிறுமலையில் சௌசௌ வீலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிறுமலை வனப்பகுதியில் உள்ள அண்ணாநகர், பழையூர், புதூர், தாளக்கடை, பொன்னுருக்கி பகுதிகளில் பீன்ஸ், சோயா, அவரை, சௌசௌ உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இங்கு விளையும் சௌசௌவை சென்ற ஆண்டு நேரடியாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகை தந்ததால் 45 கிலோ கொண்ட ஒரு சௌசௌ மூட்டை 700 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதாக கூறப்படுகிறது.
தற்போது திண்டுக்கல் காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகள் வெளிமாவட்ட வியாபாரிகளை, விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யவிடாததால் மூட்டை 150 ரூபாய்க்கு விற்பனையாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளிமாவட்ட வியாபாரிகளை நேரடி கொள்முதல் செய்திட தோட்டக் கலைத்துறையினர் வழிவகை செய்திட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.