கனடாவில் திருடிச் சென்ற சாண்ட்விச்சை தர மறுத்த பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர், ரோமன் என்ற பூனையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். அந்நபரின் பக்கத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த சாண்ட்விச் திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்நபர், தனது செல்லப்பிராணியான பூனை இருக்குமிடத்தை தேடியுள்ளார்.
அப்போது ரோமன் என்ற அந்த பூனையே சாண்ட்விச்சை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், அந்த சாண்ட்விச்சை பூனை தர மறுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.