பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது சாலையோரம் இருந்த குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது சாலையோரம் இருந்த வெடிகுண்டு வெடித்தது.
இதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.