உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் சுவற்றில் முட்டிக்கொண்ட இளைஞரை அடித்த போலீசாரை தடுக்க முற்பட்ட அவரது பாட்டியை கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சேந்தநாடு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிக்கும் செல்போன் தொலைந்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனால் காயமடைந்த இருவரும், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது மீண்டும் அடித்துக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர், கஞ்சா போதையில் இருந்த இளைஞரை பிடித்து காவல் நிலைய அறையில் தள்ளியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் சுவற்றில் வேகமாக தனது தலையை முட்டி கொண்டதால் போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முற்பட்ட இளைஞரின் பாட்டியை போலீசார் கீழே தள்ளிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.