நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் தேதி நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதற்கான தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7 ஆயிரத்து 842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன.