அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரூன் ரசீத் சந்தித்தார்.
மனிதநேய ஜனநாயக கட்சியில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு தற்போது மனிதநேய ஜனநாயக கட்சியானது அதன் தலைவர் தமீமுன் அன்சாரி மற்றும் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக திமுக, அதிமுக சார்பெடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரூன் ரசீத், பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ்-ஐ சந்தித்து நாகர்கோவிலில் நடைபெறவுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.