வேலூர் மாவட்டம் காட்பாடியில் கணவன் நினைவு நாளிலேயே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் தாங்கள் பகுதியை சேர்ந்த தம்பதி பன்னீர்செல்வம், சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பன்னீர்செல்வம் உயிரிழந்தார். மேலும், கணவர் இறந்த சோகம் மற்றும் குழந்தைகளும் இல்லாததால் சாமுண்டீஸ்வரி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவரின் நினைவு நாளில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்து அங்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சாமுண்டீஸ்வரி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.