அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் குடும்பத்தோடு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அமராவதி பகுதிகளை சுற்றியுள்ள குருமலை, தளிஞ்சி, மாவடப்பு, கருமுட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர்கள்,மாவட்ட வனத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.