புல்வாமா தாக்குதலின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அரசுப் பள்ளியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு மாணவர்கள் நினைவஞ்சலி செலுத்தினர். 2019ம் ஆண்டு புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
இதன் 6ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் புகைப்படத்திற்கு காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.