புதுச்சேரியில் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவியிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணவெளி தொகுதிகுட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நோனாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன். இவர் அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் கடந்த 4 மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்த சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. இதனையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர் மணிகண்டனை தாக்கினர். மேலும், ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.