தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்திராநகர் பகுதியை சேர்ந்த காளைப்பாண்டி, ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது ஆட்டோவில் ஏறிய 3 பேர் பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டுமென கூறியுள்ளனர். பி
ன்னர் நண்பர்கள் போல பேசிய மூவரும் காளைப்பாண்டியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக தாக்கிவிட்டு அவர்கள் ஆட்டோவை எடுத்துகொண்டு தப்பியோடினர்.
இதையடுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது காளைப்பாண்டியை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.