சென்னை சௌகார்பேட்டையில் உள்ள ஜெயின் கோயிலில் அரை கிலோ தங்கம் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
மிண்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலுக்கு வழக்கம்போல பூஜை செய்வதற்காக அர்ச்சகர் சென்றுள்ளார். அப்போது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர், சிலைகளின் மீது இருந்த அரை கிலோ அளவிலான தங்க ஆபரணங்கள் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.