புதுச்சேரியில் தனியார் பள்ளி மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தை கண்டித்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தானாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் 6 வயது சிறுமிக்கு, ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி சம்மந்தப்பட்ட பள்ளியை மாணவியின் உறவினர்கள் சூறையாடினர். இதையடுத்து மணிகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்
த நிலையில், மாணவிக்கு நீதி கேட்டும், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் நல்லவாடு, மூர்த்திக்குப்பம் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்கு செல்லாமல் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.